Loading...
 

கருப்பொருள் சார்ந்த சந்திப்புகள்

 

கருப்பொருள் அல்லது இலக்கு சார்ந்த சந்திப்புகள் என்பது சிறப்பு சந்திப்புகள் ஆகும், இதில் கிளப் ஆனது சொற்பொழிவுகளின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மதிப்பீடு செய்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அதற்கு ஒரு சில உதாரணங்கள்:

உடல் பாவனை

  • நிதானம்
  • குரல் வகை
  • சொற்பொழிவின் அமைப்பு
  • உபகரணங்களின் பயன்பாடு
  • புள்ளிவிவரங்களின் பயன்பாடு
  • உருவகங்களின் பயன்பாடு
  • சொற்பொழிவின் தொடக்கம்
  • சொற்பொழிவின் நிறைவு

 

இன்னும் பல விஷயங்களும் உள்ளன; ஒரு நேரத்தில் ஒரு இலக்கின் மீது கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது. ஒரே சந்திப்பில் அனைத்தின் மீதும் கவனம் செலுத்த முயற்சிக்காதீர்கள், ஏனெனில் அவை மிகவும் குறைவான பலனையே கொடுக்கும்.

இலக்கு அல்லது கருப்பொருள் சார்ந்த சந்திப்புகள் கிளப்பின் கல்வி பிரிவில் உள்ள துணைத் தலைவரின் பொறுப்பாகும்.

செயல்முறை

1. சந்திப்பிற்கான கருப்பொருள் அல்லது இலக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, அந்தச் சந்திப்பிற்கான சிறப்பு மதிப்பீட்டாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

2. இந்த சந்திப்பானது சாதாரண நிகழ்ச்சி நிரலையே பயன்படுத்தும், மேலும் அனைத்து உறுப்பினர்களும் வழக்கம் போல் தங்கள் வழக்கமான பணிகளையும் சொற்பொழிவுகளையும் வழங்குவார்கள். குறிக்கோள் அல்லது இலக்கு சார்ந்த சந்திப்பு என்றால் மற்ற குறிக்கோள்கள் (குறிப்பாக கல்வித் திட்டத்தின் இலக்குகள்) கைவிடப்பட்டதாகவோ அல்லது மாற்றப்பட்டதாகவோ அர்த்தமல்ல. உதாரணமாக, ஒரு உறுப்பினர் குரல் வகை என்ற தலைப்பை முக்கிய கருப்பொருளாக கொண்டு ஒரு சொற்பொழிவை நிகழ்த்த வேண்டும் என்றால், அந்த சந்திப்பின் குறிக்கோள் அல்லது இலக்கு உடல் பாவனையை மேம்படுத்துவதற்கானது என்றால், அந்த உறுப்பினர் இரண்டு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

3. சந்திப்பின் முடிவில், சிறப்பு மதிப்பீட்டாளர் அவரது அறிக்கையை சமர்ப்பிப்பார். அந்த அறிக்கையில் சந்திப்பில் பங்காற்றிய அனைவரையும் பற்றிய விஷயங்கள் இடம்பெற  வேண்டும். இதில் சந்திப்பு தலைவர், பேச்சாளர்கள், உடனடித் தலைப்பு சொற்பொழிவின் "தன்னார்வலர்கள்", ஆகியோர் அடங்குவர். அனைவருக்கும் விரிவான அறிக்கையை கொடுப்பது என்பது கஷ்டமான காரியம், ஆனால் மதிப்பீட்டாளர் ஒவ்வொரு பாத்திரமும் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்களென குறைந்தது ஒன்று அல்லது இரண்டு விஷயங்களை குறிப்பிட முயற்சி செய்ய வேண்டும். உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தில் சிறப்பாக ஏதேனும் செய்திருந்தால், அவற்றையும் குறிப்பிட வேண்டும், அப்போது அது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். இந்தப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அளவு சந்திப்பின் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. வழக்கமாக, 5 முதல் 10 நிமிடங்கள் இதற்குப் போதுமானதாக இருக்கும்.

 


Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Monday August 30, 2021 06:36:28 CEST by shahul.hamid.nachiyar.